search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கில்"

    மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமானது தொடர்பாக காண்டிராக்டர் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #CashRobbery
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை பாலவநத்தத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது66). அரசு காண்டிராக்டர். இவர் நேற்று அருப்புக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து ஒரு வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துள்ளார்.

    பணத்தை மோட்டார்சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு யூனியன் அலுவலகம் வந்தார். அங்குள்ள ஒரு டீக்கடை முன்பு வண்டியை நிறுத்தி விட்டு டீக்குடித்துள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமானது. அவர் பணத்தை பெட்டியில் வைத்துக்கொண்டு வருவதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அதனை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சேதுபாவாசத்திரம் அருகே தனியார் பள்ளியின் பஸ் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    சேதுபாவாசத்திரம்:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சம்பைபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அபுபக்கர். இவருடைய மகன் அகமது இப்ராகீம் (வயது31). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அகமது இப்ராகீம், நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நோன்பு திறந்து, தொழுகை முடித்து விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சேதுபாவாசத்திரத்துக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கிழக்கு கடற்கரை சாலையில் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா என்ற இடத்தில் சென்றபோது தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அகமது இப்ராகீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அகமது இப்ராகீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அகமது இப்ராகீமுக்கு, ரூபியாபேகம் என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு வெளிநாடு செல்ல இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×